தென்னை மறுநடவு மானிய திட்டம்: மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா ? 

Added : மே 13, 2022
Advertisement
உடுமலை:நோய்த்தாக்குதல் மற்றும் இடித்தாக்குதலால் பாதித்த தென்னை மரங்களை அகற்றி, மறுநடவு செய்ய, தென்னை வளர்ச்சி வாரியம் உதவ விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நோய்த்தாக்குதல் பரவி, மரங்கள் கருகி வருகிறது.குறிப்பாக, வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதல், தற்போது
 தென்னை மறுநடவு மானிய திட்டம்: மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா ? 

உடுமலை:நோய்த்தாக்குதல் மற்றும் இடித்தாக்குதலால் பாதித்த தென்னை மரங்களை அகற்றி, மறுநடவு செய்ய, தென்னை வளர்ச்சி வாரியம் உதவ விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நோய்த்தாக்குதல் பரவி, மரங்கள் கருகி வருகிறது.குறிப்பாக, வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதல், தற்போது வரை வேகமாக பரவி வருகிறது.
மேலும், கோடை கால மழையின் போது, இடித்தாக்குதலால், பல்வேறு பகுதிகளில், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. இடி தாக்கிய மரங்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள மரங்களின் மேற்பகுதியும், பாதிக்கப்பட்டு, குறுகிய நாட்களில், கருகி விடுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'நோய்த்தாக்குதலால் பாதித்த, மரங்களை அகற்றி விட்டு, மறு நடவு செய்ய, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், மானியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இத்திட்டம் செயல்பாட்டில் இல்லை. வரும் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் முன் இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்று, இடுபொருட்கள், வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X