சேதமுற்ற தேரோடும் வீதிகள் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு; தினமலர் செய்தி எதிரொலி

Added : மே 13, 2022
Advertisement
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா தேரோடும் வீதிகள் சேதமடைந்ததாக தினமலர் செய்தி எதிரொலியாக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆஜராக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டது.இக்கோயில் தேர்கள் செல்லும் தெற்கு ரத வீதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோடுகள் சேதமடைந்துள்ளன. தேர்கள்செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா தேரோடும் வீதிகள் சேதமடைந்ததாக தினமலர் செய்தி எதிரொலியாக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆஜராக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டது.

இக்கோயில் தேர்கள் செல்லும் தெற்கு ரத வீதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோடுகள் சேதமடைந்துள்ளன. தேர்கள்செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் சீரமைக்கஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் நாகநாதன் வலியுறுத்தினார். இதுகுறித்து தினமலர் நாளிதழில் மே 7 செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சட்ட உதவி மையம் சார்பில் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் (கிராம ஊராட்சி), திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்,திருவாடானை ஊராட்சி தலைவர் ஆகியோர் மே 16 காலை 11:00 மணிக்கு அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X