கடலில் படகு மூழ்கி 11 பேர் உயிரிழப்பு

Added : மே 13, 2022
Advertisement
சான் ஜுவான்:கரீபியன் கடலில் படகு மூழ்கி 11 பேர் உயிரிழந்தனர்.வட அமெரிக்காவிலிருக்கும் கரீபியன் கடல் பிரதேசத்தில், அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று, நேற்று முன்தினம் ரோந்து சென்றது. அப்போது, பியூர்டோ ரிகோ தீவு அருகே நடுக்கடலில் படகுஒன்று கவிழ்ந்து பலர் தத்தளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்புப் பணிகளை உடனடியாக துவக்கிய அமெரிக்க கடற்படையினர், 20 பெண்கள் உட்பட 31 பேரை

சான் ஜுவான்:கரீபியன் கடலில் படகு மூழ்கி 11 பேர் உயிரிழந்தனர்.வட அமெரிக்காவிலிருக்கும் கரீபியன் கடல் பிரதேசத்தில், அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று, நேற்று முன்தினம் ரோந்து சென்றது.

அப்போது, பியூர்டோ ரிகோ தீவு அருகே நடுக்கடலில் படகுஒன்று கவிழ்ந்து பலர் தத்தளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்புப் பணிகளை உடனடியாக துவக்கிய அமெரிக்க கடற்படையினர், 20 பெண்கள் உட்பட 31 பேரை மீட்டனர். மேலும், 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள ஹைதி தீவை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X