திருவாடானை : திருவாடானை அரசு கலைக்கல்லுாரி முதுகலை இரண்டாமாண்டு மாணவர் மகேந்திரன் தேவாலாயமும் மஞ்சுவிரட்டும் தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுத ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்த மகேந்திரன் அருகிலுள்ள கண்டிப்பட்டி அந்தோணியார் சர்ச்சில் மத ஒற்றுமையை பறைசாற்றுவதாக நடக்கும் தேர்பவனி, மஞ்சுவிரட்டு குறித்து ஆய்வு கட்டுரை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார்.மகேந்திரன் கூறியதாவது: கண்டிப்பட்டி அந்தோணியார் சர்ச் விழாவில் கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து மஞ்சுவிரட்டு நடத்துவர்.
இச்சமுதாயத்தினர் இணைந்து மாடுகளை அழைத்தல், மாடுகளுக்கு மரியாதை செய்தல், தொழு தயாரித்தல், சாமி கும்பிடுதல், பரிசளித்தல் குறித்து கட்டுரை எழுதி வருகிறேன் என்றார்.தமிழ்த்துறை தலைவர்பழனியப்பன் கூறியதாவது: தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் அனுமதியுடன் ரூ.15 ஆயிரம் நிதியுதவி மகேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மே 30க்குள் கட்டுரையை தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE