அரசு மருத்துவமனையில் தொற்றா நோய் சிகிச்சை: நோயாளிகள் வருகை குறைந்தது

Added : மே 13, 2022
Advertisement
உடுமலை:மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் வாயிலாக, உடுமலை அரசு மருத்துவமனையில், தொற்றா நோய் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய்களால் உடல் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. நோயை துவக்க நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை அளித்து, பூரண குணமடையச்செய்யும் வகையில் தொற்றா நோய்

உடுமலை:மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் வாயிலாக, உடுமலை அரசு மருத்துவமனையில், தொற்றா நோய் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய்களால் உடல் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. நோயை துவக்க நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை அளித்து, பூரண குணமடையச்செய்யும் வகையில் தொற்றா நோய் சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்வாயிலாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், பயன் அடைகின்றனர்.அவ்வகையில், உடுமலை அரசு மருத்துவமனையில், இத்திட்டத்தின்படி, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளித்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.நோய் குணமான பின்பும், சில நாட்கள் கழித்து, மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு வரவழைத்து, நோயின் நிலை குறித்து டாக்டர்கள் பரிசோதனை செய்தும் வருகின்றனர்.அவ்வகையில், தினமும், 90 பேர் வரை, இந்த திட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் காரணமாக, நோயாளிகளின் வருகை குறைந்துள்ளது.

மருத்துவப்பணிகள் துறையினர் கூறியதாவது: என்.சி.டி., என்ற இத்திட்டத்தின்படி, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தப்பரிசோதனை செய்யப்படும். இதேபோல, பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நோய்களில் ஏதேனும் ஒன்றின் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள, டாக்டர்களால் அறிவுறுத்தப்படுவர்.மருத்துவமனையில், கடந்த மாதம் வரை, தினமும், 80 முதல் 90 பேர் சிகிச்சைக்கு வந்த நிலையில், தற்போது, 50 ஆக, குறைந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X