பரங்கிப்பேட்டை,-நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு உயர்த்தி வழங்கக்கோரி, நகாய் ஒப்பந்த நிறுவன அலுவலகத்தை, முற்றுகையிட முயன்ற மா.கம்யூ.,வினர் 40 பேரை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலைக்கு, பெரியப்பட்டு முதல் சி.முட்லுார் வரை விவசாய நிலங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கக்கோரியும், பு.முட்லுார் புறவழிச்சாலை தீர்த்தாம்பாளையத்தில் வழிதடம் இரண்டை கைவிட்டு, வழித்தடம் 1ல் சாலை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மா.கம்யூ., மாவட்ட செயலர் மாதவன், மாநில குழு ரமேஷ் பாபு, மாவட்ட குழு வாஞ்சிநாதன், ஒன்றிய செயலர்கள் விஜய், ஆழ்வார், வணிக சங்க தலைவர் ஜெய்சங்கர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பெரியகுமட்டியில் உள்ள நகாய் ஒப்பந்த நிறுவன அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்து, அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.இதையடுத்து, மா.கம்யூ., மாவட்ட செயலர் மாதவன் உட்பட 40 பேரை டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE