திருப்பூர்:திருப்பூரில் நேற்று இரண்டாவது நாளாக, பாலிதீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியும் பாலிதீன் கவர்கள், டம்ளர், தட்டு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை உற்பத்தி செய்தல், விற்பனைக்கு கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக சுகாதார பிரிவினர் களம் இறங்கி கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று, 3வது மண்டலத்துக்கு உட்பட்ட கே.எஸ்.சி., பள்ளி வீதி, அரிசி கடை வீதி, பெருமாள் கோவில் வீதி பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.நகர் நல அலுவலர் (பொறுப்பு) கலை செல்வன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், சுகாதார பிரிவினர் ஏராளமான கடைகளில் இந்த சோதனையை நடத்தினர். இதில் சில கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பாலிதீன் கவர்கள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டது.இதை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE