மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பலி

Added : மே 13, 2022
Advertisement
திட்டக்குடி-ராமநத்தம் அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி, படுகாயமடைந்த ஒயர்மேன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் வெங்கடாசலம்,47. இவர் கீழக்கல்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக உள்ளார். நேற்று மதியம் 1 மணிக்கு சித்துார் கிராமத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ப்யூஸ் போடுவதற்காக ஏறி

திட்டக்குடி-ராமநத்தம் அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி, படுகாயமடைந்த ஒயர்மேன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் வெங்கடாசலம்,47. இவர் கீழக்கல்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக உள்ளார். நேற்று மதியம் 1 மணிக்கு சித்துார் கிராமத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ப்யூஸ் போடுவதற்காக ஏறி உள்ளார். டிரான்ஸ்பார்மர் முறையாக நிறுத்தப்படாததால் மின் வினியோகம் இருந்தது. ஒயரைத்தொட்டதும் மின்சாரம் தாக்கி, வெங்கடாசலம் துாக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை, உடனிருந்த ஊழியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X