அவிநாசி:அவிநாசி கோவில் தேரோட்டம், இரண்டாவது நாளாக களைகட்டியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தேர் இழுத்தனர்.கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக கருதப்படும். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. கோவில் நிலையில் இருந்து இழுத்து வரப்பட்ட தேர், வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது.
நேற்று, காலை, 9:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் உற்சாகம் குறையாமல், பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்தனர். மதியம், 2:45 மணிக்கு நிலை சென்று சேர்ந்தது. அப்போது பக்தர்கள், கரகோஷம் எழுப்பி, அரோகரா கோஷம் எழுப்பினர். இன்று காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடக்கிறது.தேருக்கு முன் இழுக்கவும், பின் தள்ளி கொடுக்கவும், இரண்டு 'புல்டோசர் பயன்படுத்தப்பட்டது. கடும் வெயில் அடித்த நிலையிலும், திரளான பெண்கள் உட்பட பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தது குறிப்பிடத்தக்கது.கடைவீதி 'கலகல'அவிநாசி கோவில் வளாகத்துக்குள் தேர்க்கடைகள் போடப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தேர்க்கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கினர். சிலர், பொழுது போக்காக கடைகளை பார்த்து சென்றனர்.தேரோட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் பலரும், தாரை, தப்பட்டை இசைக்கேற்ப, நடனாமாடினர். குறிப்பாக, தங்களின் பாரம்பரியம், கலாசாரம் சார்ந்த நடனத்தை நளினத்துடன் அவர்கள் ஆடியது, பார்வையாளர்களை வியக்க வைத்தது.
சாலை பலவீனம்
வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதியில், கடந்தாண்டு ரோட்டோரம் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, சரிவர மூடப்படாத நிலையில், தேரோட்டத்தின் போது விபரீதம் ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. சில இடங்களில் சாலையோரம் பலவீனமாக இருந்த நிலையில், மிகுந்த கவனமுடன் தேர் இழுக்கப்பட்டது.3 முறை அறுந்தவடக்கயிறுஏறத்தாழ, 400 டன் எடையுள்ள அவிநாசி பெரிய தேரை இழுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஆற்றல் தேவைப்படும். இதனால், தேருக்கு முன்னும், பின்னும், புல்டோசர் இழுவையுடன் தேரோட்டம் நடந்து வருகிறது.
இருப்பினும், வலிமையான வடக்கயிறு அமைக்கப்படும். அதுவும், இந்தாண்டு 2 லட்சம் ரூபாயில், 250 மீட்டர் நீளத்தக்கு புதிய வடக்கயிறு வாங்கப்பட்டது. அதுவும் கூட, நேற்றை தேரோட்டத்தில், கிழக்கு ரத வீதியில், மூன்று முறை அறுந்து விட்டது.உடனடியாக, வடக்கயிறு, மற்றொரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு, மீண்டும் தேரோட்டம் நடந்தது. இதனால், காலை, 9:15 மணிக்கு துவங்கிய தேரோட்டம், மதியம், 2:45 மணிக்கு நிலையை அடைந்தது. இரண்டு நாள் தேராட்டம் நடந்தும், நிலை அடைய தாமதமானது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement