பவர்டேபிள் மகாசபை வரும் 18ல் கூடுகிறது

Added : மே 13, 2022
Advertisement
திருப்பூர்:பின்னலாடைகளுக்கு தையல் கட்டண உயர்வு நிர்ணயிப்பதற்காக, திருப்பூர் தையல் நிலைய உரிமையாளர் சங்க (பவர்டேபிள் சங்கம்) மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) இடையே, பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.இருதரப்பு சங்கத்தினரும் இதுவரை எட்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், இன்னும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. அதனால், பவர்டேபிள் துறையினர் அதிருப்தி

திருப்பூர்:பின்னலாடைகளுக்கு தையல் கட்டண உயர்வு நிர்ணயிப்பதற்காக, திருப்பூர் தையல் நிலைய உரிமையாளர் சங்க (பவர்டேபிள் சங்கம்) மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) இடையே, பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.இருதரப்பு சங்கத்தினரும் இதுவரை எட்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், இன்னும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. அதனால், பவர்டேபிள் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், பவர்டேபிள் சங்க மகாசபை கூட்டம், லட்சுமி நகர் குலாலர் திருமண மண்டபத்தில், 18ம்தேதி, மாலை, 5:00 மணிக்கு நடைபெற உள்ளது. அதில், கட்டண உயர்வு ஒப்பந்த பேச்சு குறித்தும், அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X