தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கூட்டுறவு ஊழியர் வலியுறுத்தல்| Dinamalar

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கூட்டுறவு ஊழியர் வலியுறுத்தல்

Added : மே 13, 2022 | |
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட, கூட்டுறவு ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். ரேஷன் பணியாளருக்கு வழங்க வேண்டிய, 17 சதவீத அகவிலைப்படியை, காலதாமதமின்றி வழங்க வேண்டும். தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, அரசு ஊழியருக்கு பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ரேஷன் பணியாளர்கள் பிரச்னைகள்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட, கூட்டுறவு ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். ரேஷன் பணியாளருக்கு வழங்க வேண்டிய, 17 சதவீத அகவிலைப்படியை, காலதாமதமின்றி வழங்க வேண்டும். தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, அரசு ஊழியருக்கு பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ரேஷன் பணியாளர்கள் பிரச்னைகள் தொடர்பாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கங்களை அழைத்து பேசி, சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் உட்பட, மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X