நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் ஊராட்சி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி இரண்டு ஆண்டுகளான நிலையில், துார் வாரும் பணி துவங்காததால், மீண்டும் ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனர்.
கடலுார் அடுத்த சி.என்.பாளையம் மற்றும் சாத்திப்பட்டு ஊராட்சிகளுக்கு இடையே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி, 126 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், 40 ஏக்கர் சி.என்.பாளையம் ஊராட்சியிலும், மீதம் உள்ள பகுதி சாத்திப்பட்டு ஊராட்சியிலும் அமைந்துள்ளது.சி.என்.பாளையம் பகுதியில் நீர்தேங்கும் பகுதி இது மட்டுமே. இப்பகுதி ஏரி முழுவதையும் தனி நபர்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து பயிர் செய்திருந்தனர்.
இதனால் மழைகாலத்தில் ஏரியில் மழைநீர் தேங்கிட இடமின்றி கெடிலம் ஆற்றில் வீணாக கலந்து வருகிறது. மேலும் கால்நடைகளுக்கு சரியான மேய்ச்சல் இடம் இல்லாமல் விவசாயிகள் அவதியடைந்தனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை துார் வார வேண்டும் என, இப்பகுதி பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், வருவாய்த் துறையின் மூலம் ஏரியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்திட நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனால் பலர் தாமாகவே முன் வந்து ஏரியில் ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த கரும்பு, நெல் பயிர்களை அறுவடை செய்து, காலி செய்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி பக்கமே திரும்பி பார்க்கவில்லை.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு ஏரியை துார் வார அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என தெரிவித்தனர். இதனால் இரண்டு ஆண்டுகளாக ஏரி துார்வாரப்படாமல் உள்ளது.அதிகாரிகள் அலட்சியத்தை தனி நபர்கள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, மீண்டும் ஏரியை ஆக்கிரமித்து, சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர்.
இதனால், சி.என்.பாளையம் ஏரி ஒட்டு மொத்தமாக மீண்டும் விவசாய நிலமாக மாறும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.இதனிடையே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி அதிகாரிகள் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாரிட வேண்டும்.எனவே, சி.என்.பாளையம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாரிட தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான பன்னீர்செல்வம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement