திருப்பூர்:தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், திருப்பூரிலுள்ள பனியன் தொழில் கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். முன்னதாக பல்லடத்தில் உள்ள ஜவுளி பூங்காவை பார்வையிட்ட அவர், தொழில் துறையினரிடம் கலந்துரையாடினார். ஜவுளி பூங்காவை விரிவு படுத்தவேண்டும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என செயலரிடம் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, முதலிபாளையத்தில் உள்ள 'நிப்ட்--டீ 'கல்லுாரியில், ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி திட்டம், மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் நிட்டிங், தையல் மெஷினரிகள், ஆய்வகங்களை செயலர் பார்வையிட்டார்.கல்லுாரி வளாகத்தில், மத்திய, மாநில அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுவரும் டிசைன் ஸ்டுடியோ கட்டுமான பணி மற்றும் ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார். அதன்பின், முத்தணம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில், ஆடை தயாரிப்பு தொழில்நுட்பங்களை பார்வையிட்டார்.வீரபாண்டி பொது சுத்திகரிப்பு மையத்தில், சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கும் கட்டமைப்புகளையும் அவர் பார்வையிட்டு, ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்த கூட்டத்தில், தொழில் துறையினரின் பிரச்னைகள், தேவைகளை கேட்டறிந்தார்.ஜவுளித்துறை கமிஷனர் வள்ளலார், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்,'நிப்ட்-டீ' கல்லுாரி தலைவர் மோகன், தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் உடனிருந்தனர்.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:தமிழக முதல்வர் அறிவித்தபடி, ஏற்றுமதி மையங்களின் மேம்பாட்டுக்கு தேவையான அம்சங்கள் கண்டறிந்து, வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, ஜவுளித்துறை செயலர், பின்னலாடை தொழில் கட்டமைப்புகளை பார்வையிட்டுள்ளார்.ஒவ்வொரு ஏற்றுமதி மையத்திலும், 10 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த 2010 ல் சாய ஆலைகள் மூடப்பட்டு, பின்னலாடை தொழில் முடங்கியது. தமிழக அரசு, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கி, கைகொடுத்தது. இதனை மானியமாக அறிவிக்கவேண்டும் என, சாய ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில், செயலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.பின்னலாடை துறை சார்ந்த ஆய்வு மையம், திருப்பூரில் அமையவேண்டும் என செயலரிடம் கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement