லண்டன்:'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, 'டெஸ்லா' நிறுவன அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க், 50, 'டெஸ்லா' எனப்படும், 'பேட்டரி' கார்தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், பொதுமக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் சமூக வலைதளத்தை, 3.34 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக சமீபத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, டுவிட்டரை பயன்படுத்த, அவர் கட்டணம் வசூலிக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, எலான் மஸ்க் தன் சமூக வலைதள பக்கத்தில் நேற்று தெரிவித்தார். எலான் மஸ்கின் இந்த திடீர் அறிவிப்பால், டுவிட்டர் நிறுவன பங்குகள், 20 சதவீதம் வரை குறைந்தன. மஸ்கின் அறிவிப்பு குறித்து, டுவிட்டர் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE