திருப்பூர்:''திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணி முடிந்து, வரும் ஆகஸ்டில், 700 படுக்கை, விசாலமான வசதிகளுடன் திறக்கப்படும். தனியார் மருத்துவமனைக்கு நிகரான சிகிச்சை வழங்கப்படும்,'' என, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணியை ஆய்வு செய்ய, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திருப்பூர் வந்தார். பொதுப்பணித்துறையினர் கட்டுமான பணி குறித்த வரைபடத்தை காண்பித்தனர்.
'நீங்கள் என்ன வேலை செய்திருக்கிறீர்கள் என்பதை நேரடியாக பார்த்தே தெரிந்து கொள்கிறேன்' என நுழைவு வாயிலில் இருந்து கட்டுமான பணி நடக்கும் முதல்தளத்துக்கு நடந்தார் ராதாகிருஷ்ணன். மருத்துவ கல்லுாரி டீன், டாக்டர்கள் வரிசையாக கட்டுமான பணி குறித்து ஒவ்வொன்றாக கூறி வர, 'இங்க என்ன நடக்கிறது, எத்தனை தளங்கள், எவ்வளவு வேலை பாக்கி இருக்கிறது, என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா' என செயலாளர் கேட்க, 'டீன்' உள்ளிட்ட டாக்டர்கள் அமைதியாயினர்.
அதன்பின், ஓய்வு பெறும் வயதில் இருந்த சாந்திக்கு, 'செவிலியர் தின வாழ்த்துக்கள்' எனக்கூறிய, அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு தளங்களுடன் தயாராகி வருகிறது.600 முதல், 700 படுக்கைகள் இடம் பெறும். சென்னை, கோவைக்கு நிகரான மருத்துவ வசதிகள் திருப்பூரில் வாழும் மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காக, புதிய, அதிநவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, மருத்துவ உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். வரும், ஆக., மாதம் மருத்துவமனை திறக்கப்படும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE