எழுத்தாளர்கள் 21 பேருக்கு பரிசுத் தொகை

Added : மே 13, 2022
Advertisement
சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு, பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்.ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களின் சிறந்த 10 படைப்புகள், ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பு தேர்வு செய்யப்பட்டு,
 எழுத்தாளர்கள் 21 பேருக்கு பரிசுத் தொகை

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு, பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களின் சிறந்த 10 படைப்புகள், ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன்படி, ஆதிதிராவிடர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட, 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல் தவணைத் தொகையாக, தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.சேமிப்புகிடங்குகள் திறப்பு!தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 35.82 கோடி ரூபாய் செலவில், 12 சேமிப்பு கிடங்குகள், அலுவலககட்டடம், விருந்தினர் அறை கட்டப்பட்டுஉள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோகான்பரன்ஸ்' வாயிலாகதிறந்து வைத்தார்.உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, துறை செயலர்முகமது நசிமுதின்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X