கோழிக்கோடு:கேரளாவில், 'மாடல்' அழகி சஹானா தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவரை போலீசார் காவலில் அழைத்துச் சென்று உள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கோழிக்கோட்டில், மாடல் அழகியும், நடிகையுமான சஹானா, 20, தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தன் அறையில் சஹானா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சஹானாவின் தாய், 'என் மகளை, அவரது கணவர் துன்புறுத்தி வந்தார். அவரால் தான் என் மகள் தற்கொலை செய்திருப்பார்' என பரபரப்பு புகார் அளித்தார். இதையடுத்து, சஹானாவின் கணவர் சஜ்ஜத் என்பவரை, போலீசார் காவலில் அழைத்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE