சென்னை - திருப்பதி ரயில்கள் ரத்து

Added : மே 13, 2022
Advertisement
சென்னை:ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில் சேவை, வரும் 17, 18ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. பல விரைவு ரயில்களின் சேவையில் ஒரு பகுதியும் ரத்தாகிறது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கோட்டத்தில் பல்வேறு இடங்களில், ரயில் பாதை, பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை:ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில் சேவை, வரும் 17, 18ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.


பல விரைவு ரயில்களின் சேவையில் ஒரு பகுதியும் ரத்தாகிறது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கோட்டத்தில் பல்வேறு இடங்களில், ரயில் பாதை, பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே, காலை 10:00 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்; திருப்பதி - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 2:15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், வரும் 17, 18ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது


ஒரு பகுதி ரத்து

*பெங்களூரு கே.எஸ்.ஆர்., - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6:20 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்; கோவை - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6:15 மணிக்கு இயக்கப்படும் ரயில்; மைசூரு - சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 5:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், வரும் 17, 18ம் தேதியில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
* சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே மதியம் 1:35 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில்; சென்னை சென்ட்ரல் - கோவை இடையே மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயில். சென்னை சென்ட்ரல் - பெங்களூரு கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையே மதியம் 3:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், வரும் 17, 18ம் தேதிகளில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்நேரம்
மாற்றம்
* பெங்களூரு கே.எஸ்.ஆர்., - கன்னியாகுமரி விரைவு ரயில், வரும் 16ம் தேதி பெங்களூருவில் இருந்து இரண்டு மணி நேரம்; வரும் 17ம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்பட்டு செல்லும்
* சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர விரைவு ரயில் வரும் 18ம் தேதி, சென்னை சென்ட்ரலில் இருந்து, 2 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X