சென்னை:ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில் சேவை, வரும் 17, 18ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
பல விரைவு ரயில்களின் சேவையில் ஒரு பகுதியும் ரத்தாகிறது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கோட்டத்தில் பல்வேறு இடங்களில், ரயில் பாதை, பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே, காலை 10:00 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்; திருப்பதி - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 2:15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், வரும் 17, 18ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
ஒரு பகுதி ரத்து
*பெங்களூரு கே.எஸ்.ஆர்., - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6:20 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்; கோவை - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6:15 மணிக்கு இயக்கப்படும் ரயில்; மைசூரு - சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 5:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், வரும் 17, 18ம் தேதியில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
* சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே மதியம் 1:35 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில்; சென்னை சென்ட்ரல் - கோவை இடையே மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயில். சென்னை சென்ட்ரல் - பெங்களூரு கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையே மதியம் 3:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், வரும் 17, 18ம் தேதிகளில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்நேரம்
மாற்றம்
* பெங்களூரு கே.எஸ்.ஆர்., - கன்னியாகுமரி விரைவு ரயில், வரும் 16ம் தேதி பெங்களூருவில் இருந்து இரண்டு மணி நேரம்; வரும் 17ம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்பட்டு செல்லும்
* சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர விரைவு ரயில் வரும் 18ம் தேதி, சென்னை சென்ட்ரலில் இருந்து, 2 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE