உக்ரைனில் மீண்டும் இந்திய துாதரகம்

Added : மே 13, 2022
Advertisement
புதுடில்லி:'உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்தியதுாதரகம், 17 முதல் மீண்டும் இயங்கும்' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, தலைநகர் கீவ் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, கீவ் நகரில் இயங்கி வந்த இந்திய துாதரகம், ஐரோப்பிய நாடான போலந்தில் உள்ள வார்சாவ் நகருக்கு, மார்ச்

புதுடில்லி:'உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்தியதுாதரகம், 17 முதல் மீண்டும் இயங்கும்' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, தலைநகர் கீவ் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, கீவ் நகரில் இயங்கி வந்த இந்திய துாதரகம், ஐரோப்பிய நாடான போலந்தில் உள்ள வார்சாவ் நகருக்கு, மார்ச் 13ல் மாற்றப்பட்டது.

உக்ரைனில் இயங்கி வந்த பல்வேறு நாட்டு துாதரகங்களும் பக்கத்து நாடுகளுக்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தன. இதற்கிடையே, பல மேற்கத்திய நாடுகள் மீண்டும் உக்ரைனில் உள்ள தங்கள் துாதரகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருகின்றன. இதையடுத்து, கீவ் நகரில் உள்ள இந்திய துாதரகம் வரும் 17 முதல் மீண்டும் இயங்க உள்ளதாக, டில்லியில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை நேற்று அறிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X