தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாந்திர உற்ஸவம்| Dinamalar

தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாந்திர உற்ஸவம்

Added : மே 13, 2022 | |
சாயல்குடி : சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாந்திர உற்ஸவம் மே 6 காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தர்ம முனீஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் பச்சை பல்லக்கில் வெள்ளி தாமரையில் திரிசூலம், திருப்பாதங்களுடன் வேட்டை மார்க்கமாக குண்டாற்றுக்கு சென்று துஷ்ட நிக்ரஹ சுத்த பரிபாலன பூஜை நடந்தது. ஒயிலாட்டம்,

சாயல்குடி : சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாந்திர உற்ஸவம் மே 6 காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தர்ம முனீஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் பச்சை பல்லக்கில் வெள்ளி தாமரையில் திரிசூலம், திருப்பாதங்களுடன் வேட்டை மார்க்கமாக குண்டாற்றுக்கு சென்று துஷ்ட நிக்ரஹ சுத்த பரிபாலன பூஜை நடந்தது. ஒயிலாட்டம், கும்மியாட்டத்துடன் மீண்டும் கோயில் வந்தடைந்தார்.

நேற்று கோட்டை விநாயகர், பாலமுருகன், கோட்டை கருப்பசாமி, வீரசக்தி ஆகிய பரிவார தெய்வங்களுடன் தர்ம முனிஸ்வரர் குண்டாற்றில் எழுந்தருள தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிச்சட்டி எடுத்தனர். ஏற்பாடுகளைகோயில் நிர்வாகம் செய்திருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X