கொச்சி:'பி.எப்.ஐ.,எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' மற்றும் 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி' ஆகிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிர வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. '
ஆனால், அவை தடை செய்யப்படவில்லை' என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனு நீதிபதி கே.ஹரிபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ''பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாமற்றும் சோஷியல் டெமாக்ட்ரடிக் பார்ட்டி ஆகியவை பிரிவினைவாத அமைப்புகள் என்பதில் சந்தேகம்இல்லை. இந்த அமைப்புகள் தீவர வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றன. ''ஆனால் இதுபோன்ற இயக்கங்களை மத்திய அரசு இன்னும் தடை செய்யவில்லை,'' என்று கருத்து தெரிவித்தார்.உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்தக் கருத்துக்கு, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE