இல்லம் தேடிக் கல்வி மையம் மாநில ஆலோசகர் ஆய்வு

Added : மே 14, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-சிறுவங்கூரில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை, பள்ளிக் கல்வி மாநில ஆலோசகர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் 5,797 பேர் தன்னார்வலர்களாக சேர்ந்து, பொது இடங்களில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை சரிசெய்யும் வகையில்

கள்ளக்குறிச்சி-சிறுவங்கூரில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை, பள்ளிக் கல்வி மாநில ஆலோசகர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் 5,797 பேர் தன்னார்வலர்களாக சேர்ந்து, பொது இடங்களில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை சரிசெய்யும் வகையில் தினமும் மாலை நேரங்களில் 5:00 மணி முதல் 7:00 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியமாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 1 லட்சத்து 15 ஆயிரத்து 376 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.மாணவர்களின் கற்றல் விளைவுகளை சோதிக்கும் வகையில், தன்னார்வலர்களின் மொபைல் செயலி வழியாக சிறு தேர்வுகள் நடத்தப்படுகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் நடைபெறும் வகுப்பினை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில ஆலோசகர் ஜனார்த்தனன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி, மொழி விளையாட்டு, சொற்களஞ்சிய பெருக்கம் மேம்படுத்துதல் குறித்து விளக்கி பேசினார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, ராமதாஸ், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரம்போலா ஜான்சன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X