கோடை வெப்பம் காரணமாக வறண்ட உப்பாறு

Added : மே 14, 2022
Advertisement
சிவகங்கை: சிவகங்கை பகுதியில் உள்ள உப்பாறு கடும் வெப்பம் காரணமாக வறண்ட நிலையில் காணப்படுகின்றன. இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஆழ்துளை கிணறு மூலம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் விவசாயத்தினை அடிப்படையாக கொண்டது. 90 சதவீதம் விவசாயத்தினை தொழிலாக கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட சிற்றாறுகள் தான் விவசாயத்திற்கு உதவி வருகின்றன.

சிவகங்கை: சிவகங்கை பகுதியில் உள்ள உப்பாறு கடும் வெப்பம் காரணமாக வறண்ட நிலையில் காணப்படுகின்றன. இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஆழ்துளை கிணறு மூலம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் விவசாயத்தினை அடிப்படையாக கொண்டது. 90 சதவீதம் விவசாயத்தினை தொழிலாக கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட சிற்றாறுகள் தான் விவசாயத்திற்கு உதவி வருகின்றன. சிற்றாறுகளில் உப்பாறு, பாலாறு, மணிமுத்தாறு, வீருசுழியாறு, தேனாறு, பாம்பாறு, சருகணியாறு என ஆறுகள் அதிகளவில் உள்ளன. இந்த ஆறுகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழை நேரத்தில் மட்டுமே பெருக்கெடுத்துஓடுகின்றன. மற்ற நேரங்களில் வறண்டு விடுகின்றன.

இதில் உப்பாறு ஆலங்குடி கண்மாயில் உருவாகி40 கி.மீ., துாரம் வரை கடந்து மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் கலந்து வருகிறது. இதில் 7 தடுப்பணைகள் மூலம் 45 கண்மாய்கள் வரை பயன் பெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்த உப்பாறு, தற்போது கோடை வெப்பம் காரணமாக முற்றிலும் வறண்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக கிணறுகள், ஆழ்துளைகள் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வறண்டு வருகின்றன.

மானாவாரி பயிர்களான பருத்தி, சிறு தானியங்கள், பயிறு வகைள் பயிரிட்டுஉள்ளனர். போதுமான நீர் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை மழையும் பெரிய அளவில்கை கொடுக்காததால்மானாவாரி விவசாய பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X