அரசு பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசு பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

Added : மே 14, 2022 | |
விழுப்புரம்-பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் குமரவேல் தலைமை தாங்கினார். சாலை பணியாளர் சங்க செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சிங்காரம் சிறப்புரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை

விழுப்புரம்-பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் குமரவேல் தலைமை தாங்கினார். சாலை பணியாளர் சங்க செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சிங்காரம் சிறப்புரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 3 சதவீதம் அகவிலைபடியை கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டும். நிறுத்திய ஈட்டிய விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.முன்னாள் மாநில பிரசார செயலாளர் சிவகுரு, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் அருணகிரி, மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.மாநில பொருளாளர் சதீஷ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X