அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : மே 14, 2022 | |
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில துணை பொதுச் செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினர். மாநில துணைத் தலைவர் செல்லதுரை முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அழகுராஜா, கண்ணையன், லட்சுமி நாராயணன்,

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில துணை பொதுச் செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினர். மாநில துணைத் தலைவர் செல்லதுரை முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அழகுராஜா, கண்ணையன், லட்சுமி நாராயணன், பரமசிவம், கிருஷ்ணவேணி, ஜெயசுதா, செந்தாமரை, ரவி, செல்வம், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மூன்று சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும். தொகுப்பூதியம் சிறப்பூதியம் காலமுறை ஊதியம் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X