காஷ்மீர் பண்டிட் கொலை: 350 அரசு ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (3)
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை கண்டித்து, 350--க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.ஜம்மு - காஷ்மீரில், பட்கம் மாவட்டத்தின் சதுாரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்குள், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள், அங்கு எழுத்தராக பணியாற்றி வந்த
 350 Kashmiri Pandits Sent Mass Resignation To The Governor In Protest Against The Killing Of Kashmiri Pandit Rahul Bhat

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை கண்டித்து, 350--க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜம்மு - காஷ்மீரில், பட்கம் மாவட்டத்தின் சதுாரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்குள், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள், அங்கு எழுத்தராக பணியாற்றி வந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட், 36, என்பவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராகுல் பட் இறந்தார்.


latest tamil news
சம்பவத்தை கண்டித்து யூனியன் பிரதேசம் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது. பட்கம் மாவட்டத்திலிருந்து ஸ்ரீநகர் விமான நிலையம் நோக்கி பேரணியாக சென்றவர்களை, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.


இதற்கிடையே ராகுல் பட் கொல்லப்பட்டதை கண்டித்து பண்டிட்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ராகுல் பட் கொலையை கண்டித்து 350-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-மே-202212:27:30 IST Report Abuse
jayvee தமிழகத்தில் ஹிஜாப் கலாச்சாரத்தை துவக்கிய பள்ளி மாணவிகள்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
14-மே-202201:17:57 IST Report Abuse
jagan ஒரு முஸ்லீம் பாதிக்க பட்டால் ஹிந்துக்கள் ஒன்று திரள்வோம். இப்போ போட்டோவை பாருங்க, ஒரு சிறுபான்மையினர் இல்லை. அது தான் அவுங்க, நாம நாம தான்
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
14-மே-202201:10:24 IST Report Abuse
John Miller …..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X