சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் தேர் திருவிழா

Added : மே 14, 2022
Advertisement
செஞ்சி,-செஞ்சி, சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் நாள் தேர் திருவிழாவாக நேற்று காலை குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு நடந்தது.மதியம் 12:00 மணிக்கு தீ மிதி விழா

செஞ்சி,-செஞ்சி, சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் நாள் தேர் திருவிழாவாக நேற்று காலை குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு நடந்தது.மதியம் 12:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 1:00 மணியளவில் ரேணுகாம்பாள், மாரியம்மன், பரசுராமர் ஆகிய தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.மாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரேணுகாம்பாள் தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை சிறுகடம்பூர் கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X