கொலை மிரட்டல்
விருதுநகர்: கலைஞர்நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை 47, அ.ம.மு.க.,வை சேர்ந்த இவரை லட்சுமி நகரை சேர்ந்த ஆறுமுகம் அ.தி.மு.க.வில் இணையும் படி வற்புறுத்தி செய்து கொலை விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்
விருதுநகர்: குல்லுார் சந்தையை சேர்ந்தவர் சரஸ்வதி 41, இவரது மகள் நேற்று முன்தினம் தனது காதலன் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சின்னராஜூடன் மதுரையில் துணி எடுக்க செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்ப வில்லை. சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் மாயம்
சிவகாசி: பள்ளபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் 25. இவர் வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வாங்கி, வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிற்கு கொலை மிரட்டல்
சிவகாசி: திருத்தங்கல் கருணாநிதி காலனியை சேர்ந்தவர் மேரி 34. இவர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், வீட்டில் உள்ள கண்ணாடிகளை உடைத்து, தகாத வார்த்தை பேசி, கல்லால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தார் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய்கள் பலி: போலீசார் விசாரணை
சாத்துார்: சாத்துார் சிந்தப் பள்ளி இந்திரா காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி, 35. வீட்டுக்காவலுக்கு 2 நாய்கள் வளர்த்து வந்தார்.அதே ஊரை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 40. வீட்டில் 50 ஆடுகள் வளர்க்கிறார். மே 11 ல் இவரது ஒரு ஆடு நாய் கடித்து பலியானது. ஆத்திரமடைந்த சவுந்திரராஜன், இறந்த ஆட்டினை இறைச்சியாக வெட்டி அதில் விஷத்தை கலந்து வைத்தார். அந்தத விஷ இறைச்சியை சாப்பிட்ட தனது 2 நாய்களும் சிகிச்சை பலனின்றி பலியானது. இது குறித்து சவுந்தர்ராஜனிடம் கேட்டபோது ஆபாசமாக திட்டியுள்ளார். சாத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE