விக்கிரவாண்டி,-உலகலாம்பூண்டியில் என்.டி.ஆர்., எர்த் மூவர்ஸ் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உலகலாம்பூண்டி, முன்னாள் ஊராட்சி தலைவர், என்.டி.ஆர்., எர்த் மூவர்ஸ் உரிமையாளர் தெய்வசிகாமணி முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாபு ஜீவானந்தம், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமானுஜம் முன்னிலை வகித்தனர். என்.டி.ஆர்., எர்த் மூவர்ஸ் உரிமையாளர் ராஜா வரவேற்றார்.ராஜா தனது சொந்த நிதியில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை புகழேந்தி எம்.எல்.ஏ., திறந்து வைத்து, 500 பேருக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், இளைஞரணி அமைப்பாளர் வேல்முருகன், முன்னாள் அமைப்பாளர் எத்திராசன், கிளைச் செயலாளர் மணிவண்ணன், தர்மகர்த்தா யுவராஜ், நாட்டாண்மை சரவணன், ஊராட்சி தலைவர் தாஸ், துணைத் தலைவர் கலைவாணன், நிர்வாகிகள் தயாநிதி, செல்வகணபதி, கஞ்சனுார் முருகன், விக்னேஸ்வரன், சிங்காரவேல் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்னர்.என்.டி.ஆர்., எர்த் மூவர்ஸ் இளவரசன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE