விழுப்புரம்,-விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேடு ஸ்ரீ வித்யோதயா கல்வியியல் கல்லுாரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு ஜி.ஏ., கல்வி அறக்கட்டளை தாளாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சங்கரய்யா வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் 150 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசுகையில், 'வருங்கால ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வளர்ச்சியோடு கற்பித்தலும், நடைமுறை கல்வி மற்றும் வாழ்க்கைக் கல்வியையும் கற்பிக்க வேண்டும்' என்றார்.விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ், மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன், முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார்.ஜி.ஏ., நிறுவன அறங்காவலர்கள் அய்யாசாமி, சாரங்கபாணி, பன்னீர்செல்வம், விஜயரங்கன், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் குழும செயலாளர் நடராஜன், வித்யோதயா மழலையர் தொடக்கப்பள்ளி நிறுவனர் ஞானாம்பாள் விஸ்வநாதன்.வித்யோதயா கல்வியியல் கல்லுாரி இயக்குனர் ராஜூ, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சவுந்தர்ராஜன், உளவியல் துறை பேராசிரியர் கோவிந்தன், கல்வி மேலாண்மை துறை பேராசிரியர் மணி.தேர்வு கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) கணேசன், கல்வியியல் துறை உதவி பேராசிரியர் மகாலிங்கம், உளவியல் துறை உதவி பேராசிரியர் வாசுதேவன், கண்டம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜி.ஏ., கல்வி அறக்கட்டளை செயலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE