உடைந்த தரைத்தள குடிநீர் திறப்பு தொட்டி மூடிகளால் பாதிப்பு!

Added : மே 14, 2022
Advertisement
மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.அந்தந்த பகுதி வீடுகளுக்கு விநியோகம் செய்ததற்காக குழாய்களில் திருக்குகள் அமைத்து திறந்து விடுவதற்கு என தரை தள தொட்டி அதன்மேல சிமெண்ட் மூடிகள் பொருத்தப்படுகின்றன.இதன் நடுவே திறந்து

மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

அந்தந்த பகுதி வீடுகளுக்கு விநியோகம் செய்ததற்காக குழாய்களில் திருக்குகள் அமைத்து திறந்து விடுவதற்கு என தரை தள தொட்டி அதன்மேல சிமெண்ட் மூடிகள் பொருத்தப்படுகின்றன.இதன் நடுவே திறந்து விடுவதற்கு என சிறிய அளவு ஓட்டை அமைக்கப்படும். இதில் சப்ளையின் போது தண்ணீர் திறப்பாளர் நீளமான கம்பிகள் மூல திறந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பின் அடைத்து விடுவார்.

இன்னிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மெயின் ரோடுகளில் அமைக்கப்பட்ட தரைத்தள தொட்டி ஸ்லாப் மூடிகள் கனரக வாகனங்களின் எடை தாளாமல் உடைபட்டு மாதக்கணக்கில் விடப்படுவதால் ரோட்டின் ஒரு பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராஜபாளையம் மடத்துப்பட்டி நுழைவாயில், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், டி.பி மில்ஸ் ரோடு, ஆவாரம்பட்டி, தாலுகா அலுவலகம் அருகே என பல பகுதிகளிலும் மூடிகள் பாதிக்கப்பட்டு ரோட்டை உபயோகிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக டி.பி மில்ஸ் ரோட்டில் தொடரும் இப்பிரச்சனையால் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் தடுமாறி உயிர்பலி உள்ளிட்ட விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக குடிநீர் தொட்டி மூடிகளை போக்குவரத்திற்கு ஏற்ப பலமாக அமைத்து பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும்.

பவித்ரா, நகராட்சித் தலைவர், ராஜபாளையம்: இப்பிரச்சனைக்கு தீர்வு காண மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும். கனமான மூடிகளை அமைப்பது, அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு எச்சரிக்கை குறியீடு செய்து பாதுகாப்பது போன்ற மாற்று நடவடிக்கை மூலம் பிரச்சனை சரி செய்யப்படும், என்றார்.





Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X