கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை, வழக்கறிஞரணி, அமைப்புசாரா ஓட்டுரணி சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நடந்த விழாவிற்கு, ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேலுபாபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர், நகர செயலாளர் பாபு முன்னிலை வகித்தனர். விழாவில், மாவட்ட செயலாளர் குமரகுரு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், அரசு, கிருஷ்ணமூர்த்தி, தியாகதுருகம் கிருஷ்ணமூர்த்தி, கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், பழனி, சந்தோஷ், சேகர், பழனியப்பா, தனபால்ராஜ், இளங்கோவன், சந்திரன், மணிராஜ், பழனிவேல்.முன்னாள் நகர சேர்மன்கள் பாலகிருஷ்ணன், ரங்கன், வழக்கறிஞரணி துணைச் செயலாளர் வினோத், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, நிர்வாகிகள் ராஜிவ்காந்தி, சுரேஷ், கஜேந்திரமணி, வேலுார் மண்டல தகவல் தொழில்நுட்பு பிரிவு தலைவர் உமாசங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் வரதன், நகர கவுன்சிலர்கள் முருகன், சத்தியா குட்டி, சுபாஷ், மாணவரணி தலைவர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE