உளுந்துர்பேட்டை-உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட சாலைகளில் விரிவாக்கம் செய்வதற்காக வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட கட்டுப்பாட்டில் 300 கி.மீ., நீள சாலைகள் உள்ளன. இதில் உளுந்துார்பேட்டையில் இருந்து சென்னை சாலையில் மடப்பட்டு வரையிலும், திருக்கோவிலுார் சாலையில் கெடிலம் வரை, கள்ளக்குறிச்சி சாலையில் செம்பியன்மாதேவி வரையிலும், எலவனாசூர்கோட்டையில் இருந்து ஆசனுார் வரையிலும், திருவெண்ணெய்நல்லுார் சாலையில் பிள்ளையார்க்குப்பம் வரை மற்றும் இதர சாலைகள் என 300 கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன.இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து எந்த வகையில் உள்ளது, அதற்கேற்றாற்போல் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து குறித்து கணக்கெடுக்கும் பணி நடப்பது வழக்கம். அந்த வகையில் உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.ஒரு வாரம் நடைபெறும் இந்த பணியில் 50 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகளை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார் ஆய்வு செய்தார்.உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் ராகுல் மற்றும் திறன்மிகு உதவியாளர்கள், சாலைப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE