'திருவாரூர் மாடல்' போராட்டங்கள் தி.மு.க.,வுக்கு எதிராக பா.ஜ., திட்டம்

Added : மே 14, 2022
Advertisement
-''கருணாநிதி பிறந்த மண்ணிலேயே, தி.மு.க., அரசுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதை காட்டிய ஒரு நிகழ்வு தான், திருவாரூரில் பா.ஜ., நடத்திய ஆர்ப்பாட்டம். மக்கள் எழுச்சியோடு திரண்டதால் இனி, இதே மாடலில் தான், பா.ஜ., தன் போராட்டங்களை முன்னெடுத்து செல்லும்,'' என்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. அவர் அளித்த பேட்டி:திருவாரூர் ஆன்மிக பூமி. தியாகராஜர் கோவில் அங்கே பிரதானம்.
 'திருவாரூர் மாடல்' போராட்டங்கள் தி.மு.க.,வுக்கு எதிராக பா.ஜ., திட்டம்

-''கருணாநிதி பிறந்த மண்ணிலேயே, தி.மு.க., அரசுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதை காட்டிய ஒரு நிகழ்வு தான், திருவாரூரில் பா.ஜ., நடத்திய ஆர்ப்பாட்டம். மக்கள் எழுச்சியோடு திரண்டதால் இனி, இதே மாடலில் தான், பா.ஜ., தன் போராட்டங்களை முன்னெடுத்து செல்லும்,'' என்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
அவர் அளித்த பேட்டி:திருவாரூர் ஆன்மிக பூமி. தியாகராஜர் கோவில் அங்கே பிரதானம். மக்களின் நம்பிக்கைகோவிலை சுற்றிலும் இருக்கும் பிரதான வீதிகளில், ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரோட்டம் நடக்கிறது. அந்த வீதிகளில், தியாகராஜரே நடந்து சென்றதாக ஐதீகம். மக்களின் நம்பிக்கையும் அது தான். அப்படிப்பட்ட வீதிகளில் ஒன்று தான், அங்கிருக்கும் தெற்கு வீதி. அதாவது, தெற்கு ரத வீதி. அந்த வீதியின் பெயரை, தற்போதைய தி.மு.க., ஆட்சியில், 'கலைஞர் கருணாநிதி வீதி' என, மாற்றியுள்ளனர்.
நகரசபையில் தீர்மானம் போட்டு, தெற்கு வீதிக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர். பகுத்தறிவு அரசியல் செய்தவரின் பெயர் சூட்டியதை, அங்கிருக்கும் மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்தே, அங்கு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
குறுகிய கால ஏற்பாடு தான் என்றாலும், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கர் மற்றும் அகோரம் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக பணியாற்றி, எழுச்சியோடு மக்களை பங்கேற்க வைத்துள்ளனர். இனி, தமிழகம் முழுதும் இந்த, 'திருவாரூர் மாடல்' போராட்டங்கள், அரசுக்கு எதிராக எழுச்சியோடு நடத்தப்படும். இத்தனை ஆண்டு காலமும், 'டெல்டா மாவட்டங்களில் எங்களை யாரும் அசைக்க முடியாது' என்று கூறி வந்த தி.மு.க.,வினர், பா.ஜ., போராட்டத்துக்கு வந்த மக்கள் எழுச்சியை கண்டு, மிரண்டு உள்ளனர். கதிகலங்கி உள்ளனர்
பா.ஜ.,வின் கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது என்பதற்கு, இந்த போராட்ட வெற்றி எடுத்துக்காட்டு. சமீபத்தில் தான், பா.ஜ., நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலைவரை பார்த்து பார்த்து நியமித்திருக்கிறோம்.
பா.ஜ., சார்பில் ஒரு நிகழ்ச்சி என்றால், மற்ற பிரதான கட்சி நிர்வாகிகளை போல, எழுச்சியோடு மக்களை திரட்டி வர வைக்கும் வல்லமை கொண்டவர்களாக நியமித்திருக்கிறோம்.இனி, உழைத்தால் மட்டுமே பா.ஜ.,வில் பொறுப்பில் இருக்க முடியும் என்பதை எல்லாரும் உணர்ந்துள்ளனர்.
பா.ஜ., போராட்டத்துக்காக திருவாரூரில் திரண்ட மக்கள் வெள்ளத்தை பார்த்து, அங்கிருக்கும் தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியினர் என ஆளும் கூட்டணியினர் கதிகலங்கி உள்ளனர். டெல்டா மாவட்டங்கள், பா.ஜ., வசமாகும் என்பது உறுதியாகி விட்டது. இனி, மக்கள் விரும்பாத விஷயங்களை, தி.மு.க., அரசு தொடர்ந்து செய்ய முடியாது. திருவாரூர் போராட்ட புகைப்படங்களை, சித்தரிக்கப்பட்ட படம் என, 'புருடா' விட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் நிலை, இப்படி ஆகி விட்டது!இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X