தேர்வுகள் முடிந்ததால் சாயம் பூசி மாணவர்கள் கொண்டாட்டம்| Dinamalar

தேர்வுகள் முடிந்ததால் சாயம் பூசி மாணவர்கள் கொண்டாட்டம்

Added : மே 14, 2022 | |
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததையொட்டி, கலர் சாயம் பூசி மகிழ்ந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடப்பு மாத துவக்கத்தில் இறுதி தேர்வு துவங்கியது. இதில், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினமும், 3 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததையொட்டி, கலர் சாயம் பூசி மகிழ்ந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடப்பு மாத துவக்கத்தில் இறுதி தேர்வு துவங்கியது. இதில், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினமும், 3 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நேற்றுடனும் தேர்வுகள் முடிந்தது.இன்று முதல் ஜூன் மாதம் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று கடைசி தேர்வு முடிந்தவுடன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மாணவ, மாணவிகள் இங்க், கலர் பவுடர்கள், ஜிகினா ஆகியவற்றை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ந்தபடி வீட்டிற்குச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X