பொங்கலுார்:''புதினா கீரை சாகுபடி செய்து தொடர் வருமானத்தை ஈட்டலாம்'' என்று பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:நல்ல வடிகால் வசதியுடைய நிலங்களில் புதினா நன்கு வளரும். தண்டுக் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.நிலத்தை உழுது பத்து டன் மக்கிய தொழு உரம் இட்டு தண்டுக் குச்சிகளை, 40க்கு 40 செ.மீ., இடைவெளியில் மழைக்காலத்தில் நடவு செய்ய வேண்டும். இதை பூச்சி நோய் தாக்குவதில்லை. களைகளை அகற்றி நன்கு பராமரித்தால் நடவு செய்த 5-வது மாதத்தில் முதல் அறுவடையும், அதன் பின் மூன்று மாத இடைவெளியில் அறுவடை செய்யலாம். நல்ல முறையில் பராமரித்தால் நான்காண்டுகள் மகசூல் எடுக்கலாம். ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரில் இருந்து, 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும். இதற்கு ஆண்டு முழுவதும் தேவை இருப்பதால் விவசாயிகள் புதினா சாகுபடி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE