முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம்: பல்லடம் -- தாராபுரம் ரோடு விரிவாக்கம்| Dinamalar

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம்: பல்லடம் -- தாராபுரம் ரோடு விரிவாக்கம்

Added : மே 14, 2022 | |
பல்லடம்:முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பல்லடம் - -தாராபுரம் ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.பல்லடம், தாராபுரம் ரோடு, தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாக மதுரையை இணைக்கிறது. ஆண்டுதோறும் பழநி தைப்பூச விழாவுக்கு செல்லும் பல லட்சம் பக்தர்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து, மற்றும் அடிக்கடி விபத்துகள்

பல்லடம்:முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பல்லடம் - -தாராபுரம் ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.பல்லடம், தாராபுரம் ரோடு, தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாக மதுரையை இணைக்கிறது. ஆண்டுதோறும் பழநி தைப்பூச விழாவுக்கு செல்லும் பல லட்சம் பக்தர்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து, மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்த ரோடு விரிவாக்கம் செய்ய கருத்துரு அனுப்பப்பட்டது.இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:பல்லடம்- - தாராபுரம் வரை, 43 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் -- மேட்டுக்கடை வரை, 5 கி.மீ., துாரம், 40 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படும்.ஏற்கனவே, 7 மீ., அகலம் உள்ள இந்த ரோடு, 16.2 மீ., வரை, 11 தரைமட்ட பாலங்களுடன் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடக்கும் முதல் திட்டம் இதுவாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.முழுமை பெறாதது ஏமாற்றம்!பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான ரோடு வசதிகள் பல ஆண்டாக இல்லை. நீண்ட காலத்துக்கு பின், தாராபுரம் ரோடு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.ஆனால், முதல் கட்டமாக, 5 கி.மீ., மட்டுமே விரிவாக்கம் செய்யப்படுவது என்பது ஏமாற்றமளிக்கிறது.பல்லடம் -- தாராபுரம் வரை ஒரே கட்டமாக விரிவாக்கம் செய்தால், வாகன ஓட்டிகள் பயன்பெறுவர் என்பதுடன், திட்ட செலவுகளும் குறைய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X