வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 கண்மாய்களில் 10 கண்மாய்களில் தண்ணீர் வற்றிப் போனதால் மீன் பாசி ஏலம் எடுக்க யாரும் முனவரவில்லை.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 கண்மாய்களில் இரண்டை தவிர, மற்ற 21 கண்மாய்களுக்கு மீன் பாசி ஏலம் அறிவிக்கப்பட்டது. இதில் அயன்கரிசல்குளம், கோவிந்த நல்லூர், கோட்டையூர், இலந்தைகுளம், காடனேரி, மூவரை வென்றான், வெள்ள பொட்டல், துலுக்கப்பட்டி, கான்சாபுரம் ஊராட்சிகளில் உள்ள 11 கண்மாய்கள் மீன் பாசி ஏலம் விடப்பட்டுள்ளது.
அதேநேரம் மாத்தூர், மூவரை வென்றான், வலையங்குளம், வடுகப்பட்டி, காடனேரி, சேது நாராயணபுரம் ஊராட்சிகளில் உள்ள 10 கண்மாய்கள் மீன் பாசி ஏலம் நான்கு முறை அறிவிக்கபட்டும் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கடும் வெயிலின் காரணமாக கண்மாய்களில் தண்ணீர் குறைந்துள்ளதே காரணம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE