ஜெயலலிதா வீட்டுக்கு நாளை பொன் விழா

Added : மே 14, 2022
Advertisement
ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்' வீடு திறக்கப்பட்டு, நாளை 50 ஆண்டுகள் ஆகிறது. கிரகப்பிரவேச அழைப்பிதழை அனுப்பும் முன், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட கடிதமும் ஜெயலலிதா அனுப்பியுள்ளார்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள இந்த இடத்தை ஜெயலலிதாவும், அவரது தாய் சந்தியாவும் இணைந்து, 1967ல் வாங்கினர்; அப்போது அதன் மதிப்பு, 1.32 லட்சம் ரூபாய்.அந்த இடத்தில் வீடு கட்டி, பெற்றோர்
 ஜெயலலிதா வீட்டுக்கு  நாளை பொன் விழா

ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்' வீடு திறக்கப்பட்டு, நாளை 50 ஆண்டுகள் ஆகிறது. கிரகப்பிரவேச அழைப்பிதழை அனுப்பும் முன், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட கடிதமும் ஜெயலலிதா அனுப்பியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இந்த இடத்தை ஜெயலலிதாவும், அவரது தாய் சந்தியாவும் இணைந்து, 1967ல் வாங்கினர்; அப்போது அதன் மதிப்பு, 1.32 லட்சம் ரூபாய்.அந்த இடத்தில் வீடு கட்டி, பெற்றோர் நினைவாக, 'வேதா நிலையம்' என ஜெயலலிதா பெயர் சூட்டினார்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச் செயலரான ஜெயலலிதா, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை, வேதா நிலையத்தில் தான் சந்தித்தார். 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு, 100 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
- நமது நிருபர் --


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X