மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்

Added : மே 14, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவர்கள் 5 பேருக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள கல்லுாரிகளில் தங்கி பயிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 5 காது கேளாத மாற்றுத்

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவர்கள் 5 பேருக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள கல்லுாரிகளில் தங்கி பயிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 5 காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவர்கள் தமிழக அரசு வழங்கும் ஆன்ட்ராய்டு மொபைல் போன் வேண்டி நேரில் மனு செய்தனர்.மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தலா 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று வழங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X