எப்போது: கலெக்டர் அலுவலக கட்டட பிரச்னைக்கு தீர்வு...கள்ளக்குறிச்சி பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : மே 14, 2022
Advertisement
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டடம் அமைவிடம் தொடர்பாக நீடிக்கும் இழுபறிக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமானது. தற்காலிக கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சி மார்க்கெட்

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டடம் அமைவிடம் தொடர்பாக நீடிக்கும் இழுபறிக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமானது. தற்காலிக கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது. அதேபோல், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உலகங்காத்தான் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் இயங்குகிறது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஒரு பகுதியில், கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு மாவட்ட அரசு துறைகளின் அலுவலகமும் செயல்படுகிறது

.நிரந்தர கலெக்டர் அலுவலக வளாகம் அமைக்க, கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராம எல்லையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கி நடந்தது. இதற்கிடையே கோவில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், கோவில் இடத்தை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். நிரந்தரமாக்கக் கூடாது, மாத வாடகை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணைக்கு கோர்ட் அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும் என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து கலெக்டர் அலுவலக கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. மாவட்டம் துவங்கி இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், நிரந்தர கலெக்டர் அலுவலகம் அமைவிடம் தொடர்பாக இதுவரை இறுதி வடிவம் பெறாமல் உள்ளது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் நல பிரதிநிதிகளும் கலெக்டர் அலுவலக பணிகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட சபையிலும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில், வேறு இடத்தில் கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கும் மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இருப்பினும், அதில் அவ்வப்போது நிலவும் மாறுபட்ட கருத்தால் தொடர்ந்து தொய்வு நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, கலெக்டர் அலுவலக கட்டடம் அமைவிடம் தொடர்பான இழுபறிக்கு இறுதி முடிவுகள் மேற்கொண்டு பணிகளை துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X