கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 14.86 மீ.மீ., மழை பெய்துள்ளது.அசானி புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் மழை பெய்யத் துவங்கியது. நேற்று காலை வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:கள்ளக்குறிச்சி 10, தியாகதுருகம் 30, விருகாவூர் 10, சின்னசேலம், அரியலுார் மற்றும் கடுவனுாரில் தலா 12, கலையநல்லுார் 26, கீழ்பாடி 10, மூரார்பாளையம் 7, மூங்கில்துறைப்பட்டு 38, ரிஷிவந்தியம் 12, சூளாங்குறிச்சி 17, வடசிறுவளூர் 6, மாடாம்பூண்டி 19, மணலுார்பேட்டை 11, திருக்கோவிலுார் 11, திருப்பாலப்பந்தல், வேங்கூரில் தலா 15, ஆதுார் 10, எறையூர் 9, உ.கீரனுார் 20 மீ.மீ., மழை பெய்துள்ளது.மாவட்டம் முழுதும் சராசரியாக 14.86 மி.மீ., மழை பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE