கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தொகுப்பூதிய துாய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பகுதிநேர துாய்மைப் பணியாளர் ஆண், பெண் காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.இப்பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு ஜூலை 1ம் தேதியில், எஸ்.சி., - எஸ்.டி., 18 முதல் 35, பி.சி., - பி.சி.எம்., - எம்.பி.சி., - டி.என்.சி., 18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.ஆண் துாய்மைப் பணியாளர் பணியிடம் முன்னுரிமை அடிப்படையில் பொது 1, பி.சி., 1, எஸ்.சி., / எஸ்.டி., 1, எஸ்.சி.ஏ., 1, எம்.பி.சி., / டி.என்.சி., 1 மற்றும் முன்னுரிமை அல்லாத பொது 1, எம்.பி.சி., / டி.என்.சி., 1 என 7 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதேபோல், பெண் துாய்மை பணியாளர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் பொது -1, பி.சி-1, எஸ்.சி/எஸ்.டி-1, எஸ்.சி.ஏ(விதவை) -1 மற்றும் முன்னுரிமை அல்லாத பொது-1 என 5 பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இருபாலருக்கும் தொகுப்பூதியம் 3,000 ரூபாய் வழங்கப்படும்.விடுதிகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் விடுதிகளில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் வரும் 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE