தியாகதுருகம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கத்திரி வெயிலில் கோடை மழை பெய்ததால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெற்பயிருக்கு அடுத்தபடியாக கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு பயிராக இருப்பதால் சீராக தண்ணீர் பாய்ச்சி பராமரித்தால் அதிக லாபம் ஈட்ட முடியும்.மாவட்டத்தில் 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளதால் கரும்பு விற்பனை செய்த பணம் உடனடியாக கிடைக்கிறது.மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்து பாசன கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதனால் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.கடந்த ஒரு மாதமாக மின்வெட்டு பிரச்னையால் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பயிர்கள் வாடிய நிலையில் காணப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக கடந்த 5 நாட்களாக மேகமூட்டத்துடன் வெயில் குறைந்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்டம் முழுதும் இரவு விடிய, விடிய பரவலாக மழை பெய்தது.கடும் கோடையில் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்ட விவசாயிகளுக்கு தற்போதைய மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE