சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி

Added : மே 14, 2022
Advertisement
கள்ளக்குறிச்சி--கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லுாரி உள்ளதால் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்தும்

கள்ளக்குறிச்சி--கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லுாரி உள்ளதால் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்தும் அதிகளவில் உள்ளது.இந்நிலையில், தியாகதுருகம் சாலையில், நகர் புறங்களில் பல இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது.அத்தருணத்தில் பஸ், கார் போன்ற வாகனங்கள் முந்திச் செல்லும் போது சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது தண்ணீரை தெளித்தவாறு செல்கிறது. மேலும், சாலையோரம் தேங்கி நிற்கும் மழை நீரால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால், விபத்துகள் ஏற்படுகிறது.எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுபாட்டில் உள்ள தியாக துருகம் சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X