வெளிநாடு பறக்கும் அமைச்சர் குழு| Dinamalar

வெளிநாடு பறக்கும் அமைச்சர் குழு

Added : மே 14, 2022 | |
தமிழக தொழில் துறையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, அமைச்சர் அடங்கிய குழு, 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.தமிழகத்திற்கு, வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், நான்கு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின், மார்ச் 24ல் துபாய் சென்றார். அதில், ஆறு நிறுவனங்களுடன், 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் வாயிலாக, 14

தமிழக தொழில் துறையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, அமைச்சர் அடங்கிய குழு, 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்திற்கு, வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், நான்கு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின், மார்ச் 24ல் துபாய் சென்றார். அதில், ஆறு நிறுவனங்களுடன், 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் வாயிலாக, 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என உறுதி அளிக்கப்பட்டது.
சர்வதேச வணிக மாநாட்டில் பங்கேற்க, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மூன்று நாள் பயணமாக இம்மாதம் 5ம் தேதி லண்டன் சென்றார். தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தொழில் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினார்.
தற்போது, தொழில் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, அமைச்சர் தங்கம் தென்னரசு அடங்கிய உயர் அதிகாரிகள் குழு, ஐரோப்பிய நாடுகளுக்கு, பயணம் மேற்கொள்ள உள்ளது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் கிருஷ்ணன் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு, 13 நாட்கள் பயணமாக, வரும் 21ல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அங்குள்ள தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.அதில், தமிழகத்தில் உள்ள வளங்கள், ஏற்கனவே முதலீடு செய்த நிறுவனங்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் உட்பட பல்வேறு தகவல்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விளக்க உள்ளது.இதன் வாயிலாக, தமிழகத்தில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை பெற முடியும் என்ற நம்பிக்கை அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் -


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X