உயர் கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு; மாணவர் விவரம் உள்ளீடு பணி மந்தம்

Added : மே 14, 2022 | |
Advertisement
திருப்பூர்:உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யும் வகையில், மாணவர்கள் விவரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றும் பணி, அரசு பள்ளி களில் மந்தமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, மருத்துவம், பொறியியல், வேளாண், கால்நடை,
 உயர் கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு; மாணவர் விவரம் உள்ளீடு பணி மந்தம்

திருப்பூர்:உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யும் வகையில், மாணவர்கள் விவரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றும் பணி, அரசு பள்ளி களில் மந்தமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, மருத்துவம், பொறியியல், வேளாண், கால்நடை, மீன்வளர்ப்பு, சட்டக்கல்லுாரி, தனியார் கல்லுாரி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து கல்லுாரிகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிலும் ஆறு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் விவரங்களை 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மே 13ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட போதும், 75 சதவீத மாணவர் விவரம் உள்ளீடு செய்யப்படாமல் உள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆறு முதல் பிளஸ் 2 வரையில் அரசு பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம்பெற முடியும். பெரும்பாலும், பிளஸ் 2 வரையில் ஒரே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பிரச்னையில்லை. இடையில் வேறு பள்ளிக்கு மாறியவர்களுக்கு முந்தைய பள்ளி விவரங்களை சேகரிப்பதும், சரிபார்ப்பதும் கடினமாக உள்ளது.பொதுத்தேர்வு காரணமாக இப்பணி மிகவும் தாமதமாகி வருகிறது. தேர்வு முடிந்து ரிசல்ட் வெளியாவதற்குள் இப்பணியை முடித்தால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு எளிதாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X