நுால் விலையை குறைக்க வரும் 16ல் 'ஸ்டிரைக்'

Added : மே 14, 2022
Advertisement
கரூர்:'நுால் விலையை குறைக்க கோரி, வரும் 16ல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்' என, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:நுால் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் ஜவுளி தொழில் நடைபெறும் பிற நகரங்களில், வரும் 16, 17ல் வேலை நிறுத்தம் நடக்கிறது.வரும் 16ல், தமிழக

கரூர்:'நுால் விலையை குறைக்க கோரி, வரும் 16ல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்' என, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:நுால் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் ஜவுளி தொழில் நடைபெறும் பிற நகரங்களில், வரும் 16, 17ல் வேலை நிறுத்தம் நடக்கிறது.வரும் 16ல், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, நுால் விலை உயர்வு குறித்து எடுத்துக் கூறி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்க உள்ளோம்.தொடர்ந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடமும் கோரிக்கை மனு வழங்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் நுால் விலையால், ஒரு வாரம் உற்பத்தியை நிறுத்த, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வட்டார ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி நேற்று கூறியதாவது:நுால் விலை உயர்வால், விசைத்தறி தொழில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. உற்பத்தி செலவு அதிகரித்து விட்டதால், உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வரும் 16 முதல் 22 வரை, உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X