வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுமா?| Dinamalar

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுமா?

Added : மே 14, 2022 | |
வெள்ளகோவில்;வெள்ளகோவிலிலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் கடந்த 1,988ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 34 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிலை சுற்றிலும் தண்ணீர் ஊற்றெடுத்து, தேங்கி சுவாமி
 வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுமா?

வெள்ளகோவில்;வெள்ளகோவிலிலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் கடந்த 1,988ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 34 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிலை சுற்றிலும் தண்ணீர் ஊற்றெடுத்து, தேங்கி சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால், 1.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிக்கு அனுமதி கேட்டு அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X